ஒவ்வொரு மாணவரின் கற்றல் அடைவுகளை, தகுந்த கால இடைவெளியில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech Labs) வாயிலாக அளவிடவும், தரவுகளின் அடிப்படையில் பதிவு செய்யவும், கற்றல் கற்பித்தல் தரத்தை உறுதி செய்யவும், அதனடிப்படையில் உகந்த குறைதீர் உத்திகளை உருவாக்கிக் கற்றல் கற்பித்தலின் தரத்தை மேம்படுத்தவும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மதிப்பீட்டுப்புலம் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று 2021-2022 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை அறிவிப்பாக மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் அறிவித்தார். இதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான அரசாணையை (எண்.155, பள்ளிக்கல்வித் (ERT) துறை, நாள் 16.11.2021) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
Search By: