பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாடு அரசு

×

18 வயதுக்கு முன் எந்த குழந்தைக்கும் திருமணம் செய்து வைக்க முடியாது

(18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான 24x7 கட்டணமில்லா ஹெல்ப்லைன்)

  • நீங்கள் அச்சுறுத்தப்பட்டதாகவோ அல்லது துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவோ அல்லது துன்புறுத்தப்படுவதையோ உணர்ந்தால் - உணர்ச்சி ரீதியாக, உடல் ரீதியாக அல்லது பாலியல் ரீதியாக
  • நீங்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால்
  • குழந்தைத் திருமணம் நடப்பது குறித்து உங்களுக்குத் தெரிந்தால், அதைப் பற்றி தெரிவிக்க வேண்டும்
  • தேர்வுகள் அல்லது உயர்கல்விக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்டால்
  • நீங்கள் ஒரு தொழில் ஆலோசகரிடம் பேச விரும்பினால்
  • கல்விச் சான்றிதழ்களில் சந்தேகம் இருந்தால்
பள்ளி சுவரொட்டிகளை இங்கே பதிவிறக்கவும்

*அழைப்பாளர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்

A
DEE

தொடக்கக் கல்வி


பள்ளிகள்


மாணவர்கள்


ஆசிரியர்கள்

முன்னுரை

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 45 வது பிரிவு, அரசியலமைப்புச் சட்டம் தொடங்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குள், அனைத்து குழந்தைகளுக்கும் 14 வயது நிறைவடையும் வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வியை மாநிலங்கள் வழங்குவதை வலியுறுத்துகிறது.
86வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2002 மூலம் 21A பிரிவு சேர்க்கப்பட்டு, 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கற்கும் உரிமை என்பது அடிப்படை உரிமை என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வி என்பது 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் பெறும் கட்டாயக் கல்வியின் முதல் நிலையைக் குறிக்கிறது. இது பல்வேறு பாடங்களின் அடிப்படை புரிதலை மாணவர்களுக்கு வழங்குகிறது. மேலும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் சிக்கலான விசயங்களைத் தீர்ப்பதற்கான சிந்தனைத் திறன்களை வளர்க்கிறது.
6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி என்ற நோக்கத்துடன் 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றம் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டம், 2009 (2009ஆம் ஆண்டின் 35 ஆம் சட்டம்)ஐ இயற்றியது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-ஐ நடைமுறைப்படுத்தவும், தொடக்கக் கல்வியின் மூலம் கல்வி இலக்குகளை அடையவும், தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது

நோக்கங்கள்
திட்டங்கள்

  1. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது (1-8 வகுப்பு)
  2. மதிய உணவு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும் அனைத்து மாணவர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் 4 இணை சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது (1-8 வகுப்பு)
  3. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் சுயநிதிப் பிரிவுகளுக்கு தமிழ் வழி பாடப் புத்தகங்கள் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது (1-8 வகுப்பு)
  4. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது (1-8 வகுப்பு)
  5. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா புத்தகப்பை வழங்கப்பட்டு வருகிறது (1-8 வகுப்பு)
  6. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 மற்றும் 2ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா வண்ணக் குச்சிகள் (Crayons) வழங்கப்பட்டு வருகிறது 
  7. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா வண்ணப் பென்சில்கள் (Colour Pencils) வழங்கப்பட்டு வருகிறது 
  8. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் சுயநிதிப் பிரிவு / சுயநிதிப் பள்ளிகளில் இருந்து 7 மற்றும் 8ஆம் வகுப்பில் புதிதாக சேர்க்கை செய்யப்படும் மாணவர்களுக்கும் விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்கப்பட்டு வருகிறது.
  9. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் சுயநிதிப் பிரிவு / சுயநிதிப் பள்ளிகளில் இருந்து 7 மற்றும் 8ஆம் வகுப்பில் புதிதாக சேர்க்கை செய்யப்படும் மாணவர்களுக்கும் விலையில்லா நில வரைபட புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது.
  10. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லாக் காலணிகள் வழங்கப்பட்டு வருகிறது.
  11. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லாக் காலேந்திகள் மற்றும் காலுறைகள் வழங்கப்பட்டு வருகிறது.
  12. மலைப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லாக் கம்பளிச் சட்டை வழங்கப்பட்டு வருகிறது (1-8 வகுப்பு)
  13. மலைப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா உறைக் காலணி மற்றும் காலுறைகள் வழங்கப்பட்டு வருகிறது (1-8 வகுப்பு)
  14. மலைப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா மழைக் கால ஆடை வழங்கப்பட்டு வருகிறது (1-8 வகுப்பு)

அனைவரும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் திறன்களை அடைவதற்கென எண்ணும் எழுத்தும் இயக்கம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும். 1-3 வகுப்புகளில் படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவுத் திறன்களைப் பெறுவதை உறுதி செய்வதே இவ்வியக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும். ஆசிரியர்களுக்கென தலைமைப் பண்பு பயிற்சி, ஆசிரியர்களுக்கான கையேடு, மாணாக்கரின் நிலைக்கேற்ற கற்றல் உபகரணங்கள் ஆகியன இவ்வியக்கத்தின் முதன்மை செயல்பாடாக அமையும். ஒவ்வொரு குழந்தையின் அடைவுத் திறனும் தனித்தனியே கண்காணிக்கப்படும். இந்நிதியாண்டில் எண்ணும் எழுத்தும் இயக்கத்திற்கென ரூ.66.70 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

  • அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி வழங்குதல்
  • 6 வயது முதல் 14 வயதுள்ள அனைத்து குழந்தைகளையும் 100 விழுக்காடு பள்ளிகளில் சேர்த்தல் மற்றும் தக்க வைத்தலை உறுதிப்படுத்துதல்
  • குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009யை நடைமுறைப்படுத்துதல்
  • புதிய பள்ளிகள் தொடங்க இயலாத குடியிருப்புப் பகுதிகளான அடர்ந்த காடுகள், மலைவாழ் பகுதிகள் போன்றவற்றில் போக்குவரத்து மற்றும் பாதுகாவலர் வசதிகளை மாணவர்களுக்கு வழங்குதல்
  • சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள், பின்தங்கிய மற்றும்  நலிவடைந்த பிரிவினைச் சார்ந்த குழந்தைகளுக்கு ஏற்ற உள்ளடக்கிய கல்விக்கான சூழலை ஏற்படுத்தித் தருதல்
  • குழந்தைகளின் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்துதல்
  • கல்விசார் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளில் குழந்தைகளுடைய அறிவுத் திறன்களை வலுப்படுத்துதல்

  1. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருவாய் ஈட்டும் பெற்றோர் மரணமடைந்தாலோ அல்லது விபத்தால் நிரந்தர முடக்கம் அடைந்தாலோ ரூ.75,000/- பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெயரில் அரசு நிதி நிறுவனங்களில் வைப்பு நிதியாக செலுத்தப்படுகிறது.
  2. புதிய பள்ளிகள் தொடங்க இயலாத அடர்ந்த காடுகள் மற்றும் மலைவாழ் பகுதிகளை சார்ந்த குடியிருப்புப் பகுதி மாணவர்களுக்கு போக்குவரத்துக் கட்டணம் வழங்கப்பட்டு வருகிறது.
  3. மாணவர் விபத்து நிவாரண நிதியுதவி - பள்ளி மற்றும் பள்ளிசார் செயல்பாடுகளின் போது எதிர்பாராது நிகழும் விபத்துகளினால் பாதிப்புக்கு உள்ளாகும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதியுதவியாக விபத்தால் இறப்பு நேரிடின் ரூ.1,00,000/-ம் பெரிய காயங்களுக்கு ரூ.50,000/-மும் சிறிய காயங்களுக்கு ரூ.25,000/-மும் வழங்கப்பட்டு வருகிறது.



வழங்கப்படும் சேவைகள்

நோக்கம் : 3+ முதல் 9+ வயதுடைய குழந்தைகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையில் கல்வி பயில்வதற்கு பள்ளி வசதி ஏற்படுத்துதல் பயனாளிகள் : பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளை / சங்கம் விண்ணப்பிக்க வேண்டிய அலுவலர் : சார்ந்த வட்டாரக் கல்வி  அலுவலர் தகுதி, தேவையான ஆவனங்கள், குறைதீர் செயல்முறைகள் ஆகியன குறித்த கூடுதல் தகவல்கள் பெற இங்கே சொடக்கவும்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 தமிழகத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப்பிரிவு 12(1)(c) இன்படி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை நுழைவுநிலை வகுப்பில் அதாவது எல்.கே.ஜி. / முதல் வகுப்பில் சேர்க்கை செய்வது சார்ந்து தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.  2017-18ஆம் ஆண்டு முதல் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கைக்கு இணைய வழியாக விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் பள்ளிகளில் சேர்க்கைக்கு பெற்றோர் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பங்களுக்கு சேர்க்கை வழங்க வேண்டிய பொறுப்பு பள்ளிகளைச் சார்ந்ததாகும். வட்டார மற்றும் மாவட்ட அளவில் உள்ள கல்வி அலுவலகங்களில் கட்டணமில்லாமல் இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட காலியிடங்களை விட அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் விண்ணப்பதாரர் / பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர். முன்னுரிமைப் பிரிவினரான ஆதரவற்ற மற்றும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மாற்றுப்பாலினத்தவர், துப்புரவுப் பணியாளர்களின் குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்கள் முதலில் பரிசீலனை செய்யப்பட்டு குலுக்கல் நடத்தப்படுவதற்கு முன்னர் அவர்களுக்குச் சேர்க்கை வழங்கப்படும். 2019-20ஆம் ஆண்டில், 76,927 வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்க்கை செய்யப்பட்டுள்ளனர்.   விண்ணப்பிப்பதற்கான அத்தியாவசிய ஆவணங்கள்

  • விண்ணப்பதாரரின் புகைப்படம் (150 small px x 175 small px)
  • பிறப்புச் சான்றிதழ்
  • பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆதார் / ரேஷன் கார்டு
  • பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினக்கான வருமானச் சான்றிதழ்
  • சாதி சான்றிதழ் (SC/ ST/ MBC/ DNC/ BC/ BCM)
  • முன்னுரிமை கோரும் வகைக்கான தகுதிச் சான்றிதழ்
2019-20ஆம் கல்வியாண்டில் RTE சட்டத்தின் கீழ் 4,748 பள்ளிகளில் சேர்க்கை செய்யப்பட்ட 1,65,445 மாணவர்களுக்கு ரூ.109.00 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

காட்சிப் படங்களில்





முகப்புப் பக்கத்திற்கு திரும்ப