பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாடு அரசு

×

18 வயதுக்கு முன் எந்த குழந்தைக்கும் திருமணம் செய்து வைக்க முடியாது

(18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான 24x7 கட்டணமில்லா ஹெல்ப்லைன்)

  • நீங்கள் அச்சுறுத்தப்பட்டதாகவோ அல்லது துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவோ அல்லது துன்புறுத்தப்படுவதையோ உணர்ந்தால் – உணர்ச்சி ரீதியாக, உடல் ரீதியாக அல்லது பாலியல் ரீதியாக
  • நீங்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால்
  • குழந்தைத் திருமணம் நடப்பது குறித்து உங்களுக்குத் தெரிந்தால், அதைப் பற்றி தெரிவிக்க வேண்டும்
  • தேர்வுகள் அல்லது உயர்கல்விக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்டால்
  • நீங்கள் ஒரு தொழில் ஆலோசகரிடம் பேச விரும்பினால்
  • கல்விச் சான்றிதழ்களில் சந்தேகம் இருந்தால்
பள்ளி சுவரொட்டிகளை இங்கே பதிவிறக்கவும்

*அழைப்பாளர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்

A
DGE

அரசுத் தேர்வுகள் இயக்ககம்

5394
புலப்பெயர்ச்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளது

4,51,689
மதிப்பெண் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டு உள்ளது

27,00,000
ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது

அறிமுகம்

மாநிலப் பொதுத் தேர்வுகளை தரமாகவும், நல்ல செயல்திறத்துடனும் மேம்படுத்தும் நோக்கத்தில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் 1975-இல் அமைக்கப்பட்டது. X, XI மற்றும் XII -ஆம் வகுப்பு மாநிலப் பொதுத் தேர்வுகளைத் தவிர, இவ்வியக்ககம் தேசிய அளவிலான திறனாய்வுத் தேர்வு (NTSE), தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை தேர்வு (NMMS) மற்றும் தமிழ்நாடு ஊரக மாணவர்கள் திறனாய்வுத் தேர்வு (TRUST) போன்ற உதவித் தொகைக்கான தேர்வுகள் நடத்துவதற்குரிய பொறுப்புகளைக் கொண்டுள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதள முகவரி:- http://www.dge.tn.gov.in/

குறிக்கோள்கள்
பணிகள்

கல்விசார் தேர்வுகள்

உதவித் தொகைக்கான தேர்வுகள்

வழங்கப்படும் சேவைகள்

நோக்கம்: உயர்கல்வி பயில்வதற்காகவும், வேலைவாய்ப்பிற்காகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்ட ஏழு (07) தினங்களுக்குள் சான்றிட்ட மதிப்பெண் நகல் வழங்கப்படுகிறது.

பயனடைவோர்: அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த தேர்வர்கள்

 

விண்ணப்பிக்க வேண்டிய அலுவலகம்: 

இணை இயக்குநர் (பணியாளர்) /இணை இயக்குநர் (மேல்நிலை), அரசுத் தேர்வுகள் இயக்ககம்.

விண்ணப்பிப்பதற்கான தகுதி, தேவைப்படும் ஆவணங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு, இங்கே சொடுக்கவும்.

நோக்கம்:  பிற மாநிலங்களில் மேற்படிப்பைத் தொடர்வதற்காக புலப்பெயர்ச்சி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

 

பயனடைவோர்:

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று  பிற மாநிலங்களில் மேற்படிப்பைத் தொடர விரும்பும் தேர்வர்கள்

விண்ணப்பிக்க வேண்டிய அலுவலகம்: 

 இயக்குநர், அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6.

விண்ணப்பிப்பதற்கான தகுதி, தேவைப்படும் ஆவணங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு, இங்கே சொடுக்கவும்.

நோக்கம்:  உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பணி நியமன அதிகாரிகளிடமிருந்து பெறப்படும்  விண்ணப்பங்களின் அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிதல்.

பயனடைவோர்:

எட்டாம் வகுப்பு/பத்தாம் வகுப்பு/ மேல்நிலைத் தேர்வுகள்/தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுகளை எழுதிய  தேர்வர்கள்.

 

விண்ணப்பிக்க வேண்டிய அலுவலகம்: 

சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம்.

விண்ணப்பிப்பதற்கான தகுதி, தேவைப்படும் ஆவணங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு, இங்கே சொடுக்கவும்.

நோக்கம்;  சிறப்புக் கவனம் தேவைப்படும்  அனைத்து குழந்தைகளுக்கும் (மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கு) குறைபாட்டின் தன்மையைப் பொறுத்து பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

  • தேர்வெழுத கூடுதல் நேரம்
  • சொல்வதை எழுதுபவர் நியமனம்
  • கணிப்பான்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதி
  • ஏதேனும் ஒரு மொழிப்பாடத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு

 

பயனடைவோர்:  எட்டாம் வகுப்பு/பத்தாம் வகுப்பு/ மேல்நிலைத் தேர்வுகள்/தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுகளை எழுதும் சிறப்புக் கவனம் தேவைப்படும்  குழந்தைகள் (மாற்றுத் திறனாளித் தேர்வர்கள்).

 

விண்ணப்பிக்க வேண்டிய அலுவலகம்: 

சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம்.

விண்ணப்பிப்பதற்கான தகுதி, தேவைப்படும் ஆவணங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு, இங்கே சொடுக்கவும்.

நோக்கம்; இணையதளம் வாயிலாக தேர்வர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்க வழிவகை செய்தல். 

 

பயனடைவோர்:  மேல்நிலை / தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகளை எழுதிய  தேர்வர்கள்.

 

விண்ணப்பிக்க வேண்டிய அலுவலகம்:  

இணையதளம் வழியாக

 

விண்ணப்பிப்பதற்கான தகுதி, தேவைப்படும் ஆவணங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு, இங்கே சொடுக்கவும்.

பயனடைவோர்:  பத்தாம் வகுப்பு (மறுகூட்டல் மட்டும்) / மேல்நிலை / தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகளை எழுதிய  தேர்வர்கள்

 

விண்ணப்பிக்க வேண்டிய அலுவலகம்:  

இணையதளம் வழியாக

 

விண்ணப்பிப்பதற்கான தகுதி, தேவைப்படும் ஆவணங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு, இங்கே சொடுக்கவும்.

காட்சிப் படங்களில்




முகப்புப் பக்கத்திற்கு திரும்ப