பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாடு அரசு

×

18 வயதுக்கு முன் எந்த குழந்தைக்கும் திருமணம் செய்து வைக்க முடியாது

(18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான 24x7 கட்டணமில்லா ஹெல்ப்லைன்)

  • நீங்கள் அச்சுறுத்தப்பட்டதாகவோ அல்லது துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவோ அல்லது துன்புறுத்தப்படுவதையோ உணர்ந்தால் - உணர்ச்சி ரீதியாக, உடல் ரீதியாக அல்லது பாலியல் ரீதியாக
  • நீங்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால்
  • குழந்தைத் திருமணம் நடப்பது குறித்து உங்களுக்குத் தெரிந்தால், அதைப் பற்றி தெரிவிக்க வேண்டும்
  • தேர்வுகள் அல்லது உயர்கல்விக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்டால்
  • நீங்கள் ஒரு தொழில் ஆலோசகரிடம் பேச விரும்பினால்
  • கல்விச் சான்றிதழ்களில் சந்தேகம் இருந்தால்
பள்ளி சுவரொட்டிகளை இங்கே பதிவிறக்கவும்

*அழைப்பாளர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்

A

எண்ணும் எழுத்தும்

ஒரு கண்ணோட்டம்

தமிழ்நாட்டின் தொடக்க வகுப்பறைகளில் கற்றல், கற்பித்தலின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் எண்ணும் எழுத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டு வயதிற்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பொருள் புரிந்து படிக்கவும் எண்மதிப்பு அறிந்து அடிப்படைக் கணக்குகளைச் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது இதன் இலக்காகும். கரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைச் சரிசெய்வதையும் எண்ணும் எழுத்தும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நோக்கத்தினை அடையும்வகையில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத் தலைமையின்கீழ் 2022ஆம் கல்வியாண்டிலிருந்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 1,2,3வகுப்புகளில் எண்ணும் எழுத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொலைநோக்கு

2025ஆம் கல்வியாண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்துக் குழந்தைகளும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறுவர்.

நோக்கம்

2022-23ஆம் கல்வியாண்டில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு 1,2,3 வகுப்புகளில் எண்ணும் எழுத்தும்.


மைல்கற்கள்


வளங்கள்




சிறப்பம்சங்கள்


ஊடகத் தொகுப்பு