தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான புதுஊஞ்சல் (4 முதல் 5ஆம் வகுப்பு வரை) , தேன்சிட்டு (6 முதல் 9ஆம் வகுப்பு வரை ) ஆகிய இரண்டு சிறார் இதழ்கள் 4 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வெளியிடப்படுகின்றன. இந்த இதழ்கள் மாணவர்கள் தங்களின் படைப்பாற்றலை பங்களிக்கவும், பல்வேறு பள்ளி அளவிலான போட்டிகளில் ஒரு பகுதியாக இருக்கவும் ஒரு சிறந்த தளத்தை வழங்குகிறது. மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகத்திற்கு வெளியேயும் உள்ள பலவிதமான உள்ளடக்கங்களை வெளிப்படுத்துவதை உறுதி செய்வதற்காக, இவ்விதழ்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
மேலும் , பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்காக கனவு ஆசிரியர் என்ற இதழை வெளியிடுகிறது. அதில் இன்போடெயின்மென்ட்(தகவல் மற்றும் பொழுதுபோக்கு) , கல்வி தொடர்புடைய பிரச்சனைகள் மற்றும் ஆசிரியர்கள் மேம்பாட்டிற்கான தகவல்கள் ஆகியவை இடம்பெறும் .
வாசிக்கும் ஆர்வத்தை வளர்க்கவும், வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறையும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும் இணைந்து இந்த இதழ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மாணவர்கள் பங்களிக்கவும் கற்றுக்கொள்ளவும் முடியும் .
எங்கள் இதழ்களுக்கு சந்தா செலுத்துவதன் மூலம் சிறப்பாக தொகுக்கப்பட்ட கதைகளையும்,சிறப்பு கலைப்படைப்புகளுடன் சிறந்த வாசிப்பையும் பெற்று மகிழுங்கள்!
ஒவ்வொரு இதழுக்குள்ளும், நீங்கள் தெரிந்துகொள்பவை:
புது ஊஞ்சல்
வகுப்பு 4 - 5 (15 நாட்களுக்கு ஒரு முறை)
ஒரு வெளியீட்டின் விலை | Rs.10 |
மாதத்தொகை | Rs.20 |
சந்தா தொகை (ஆண்டு) | Rs.200 |
தேன்சிட்டு
வகுப்பு 6 - 9 (15 நாட்களுக்கு ஒரு முறை)
ஒரு வெளியீட்டின் விலை | Rs.10 |
மாதத்தொகை | Rs.20 |
சந்தா தொகை (ஆண்டு) | Rs.200 |
கனவு ஆசிரியர்
ஆசிரியர்களுக்காக மாதம் ஒரு முறை
ஒரு வெளியீட்டின் விலை | Rs.20 |
மாதத்தொகை | Rs.20 |
சந்தா தொகை (ஆண்டு) | Rs.200 |
இவை அனைத்தும்
ஒரு வெளியீட்டின் விலை | Rs.40 |
மாதத்தொகை | Rs.60 |
சந்தா தொகை (ஆண்டு) | Rs.600 |