பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாடு அரசு

×

18 வயதுக்கு முன் எந்த குழந்தைக்கும் திருமணம் செய்து வைக்க முடியாது

(18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான 24x7 கட்டணமில்லா ஹெல்ப்லைன்)

  • நீங்கள் அச்சுறுத்தப்பட்டதாகவோ அல்லது துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவோ அல்லது துன்புறுத்தப்படுவதையோ உணர்ந்தால் - உணர்ச்சி ரீதியாக, உடல் ரீதியாக அல்லது பாலியல் ரீதியாக
  • நீங்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால்
  • குழந்தைத் திருமணம் நடப்பது குறித்து உங்களுக்குத் தெரிந்தால், அதைப் பற்றி தெரிவிக்க வேண்டும்
  • தேர்வுகள் அல்லது உயர்கல்விக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்டால்
  • நீங்கள் ஒரு தொழில் ஆலோசகரிடம் பேச விரும்பினால்
  • கல்விச் சான்றிதழ்களில் சந்தேகம் இருந்தால்
பள்ளி சுவரொட்டிகளை இங்கே பதிவிறக்கவும்

*அழைப்பாளர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்

A
NFAE

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம்

16,779*
கற்போர் மையங்களின் எண்ணிக்கை

3,61,492*
கற்றோர் எண்ணிக்கை

16,808*
தன்னார்வல ஆசிரியர்களின் எண்ணிக்கை

இயக்ககம் அறிமுகம்

ஒரு மாநிலத்தின் பொருளாதார மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு கல்வி ஒரு முக்கிய அடித்தளமாக உள்ளது. மாநிலத்தின் மக்கள் தொகையில் பெரும்பான்மையான மக்கள் ஊரகப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். மாநிலத்தின் சமுதாய முன்னேற்றத்திற்கு எழுத்தறிவு பெற்றவர்கள் விழுக்காட்டின் வளர்ச்சி முக்கிய காரணிகளுள் ஒன்றாக விளங்குகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, மாநிலத்தின் எழுத்தறிவு பெற்றவர்களின் விழுக்காட்டினை அதிகப்படுத்த குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கீட்டை வழங்கி, கல்வி சார் மற்றும் இதர நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது.
முன்குறிப்பிடப்பட்டுள்ள சிறந்த இலக்கை அடைந்திடும் பொருட்டும், தமிழ்நாட்டில் கல்லாதவர்கள் இல்லாத நிலையை உருவாக்கும் வகையிலும், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் 1976ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 15 வயதுக்குமேற்பட்ட முற்றிலும் எழுத படிக்கத் தெரியாதோருக்கு எழுத்தறிவை வழங்குவதே இவ்வியக்ககத்தின் இலக்காகும்.
*இந்தப் புள்ளிவிவரங்கள் பின்வரும் மூன்று திட்டங்களில் உள்ள மையங்கள், கற்பவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரின் மொத்த எண்ணிக்கையைக் குறிக்கின்றன.
சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் 2019-20, பின்தங்கியுள்ள மாவட்டங்களுக்கான சிறப்பு எழுத்தறிவு திட்டம் 2019-21 கற்போம் எழுதுவோம் இயக்கம் 2020-21 குறிப்பிட்ட திட்டங்கள் தொடர்பான தகவல்களுக்குக் குறிப்பிட்ட திட்டப் பகுதியைப் பார்க்கவும். .

குறிக்கோள்கள்
சாதனைகள் மற்றும் விருதுகள்

தமிழ்நாட்டில், 1978-79 முதல் 1981-82 வரையிலான 3 ஆண்டு காலகட்டதிற்குள் 10 இலட்சத்திற்குமேற்பட்ட எழுத்தறிவற்றோரை கற்றோராக்கிய செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையிலும், மாநிலத்தில் எழுத்தறிவின்மையை முற்றிலும் அகற்ற இவ்வியக்ககத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை பெருமைப்படுத்தும் விதமாகவும், கடந்த 1982ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி அன்று யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெற்ற உலக எழுத்தறிவு தின கொண்டாட்ட நிகழ்வின் போது வழங்கப்பட்ட யுனெஸ்கோவின் “NADEZHDA K. KRUPSKAYA” என்கிற உயரிய விருதானது, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் திரு. J.A. ரேயான் அவர்களால் பெற்றுக் கொள்ளப்பட்டது. கடந்த 2013, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் வயது வந்தோருக்கான கல்வித் திட்டங்களில் சிறப்பான செயல்பாடுகள் மற்றும் பங்களிப்புகளின் காரணமாக மாநிலம், மாவட்டம் மற்றும் கிராம பஞ்சாயத்து ஆகிய நிலைகளில் தேசிய எழுத்தறிவு விருதுகளைத் தனது மகுடத்தில் தமிழகம் சூடிக்கொண்டுள்ளது. 2020-21ஆம் ஆண்டில் கற்போம் எழுதுவோம் இயக்கச் செயல்பாடுகளை சிறப்பாகச் செயல்படுத்திய 114 சிறந்த கற்போர் மையங்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் ஆகியனவற்றை உள்ளடக்கிய மாநில எழுத்தறிவு விருது வழங்கப்பட்டது.

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக உருவாக்கும் நோக்கோடு, 38 மாவட்டங்களிலும் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு, வாழ்வியல் திறன், ஆகியவற்றை வழங்க திட்டமிடப்பட்டு              " புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027 "என்ற புதிய திட்டம் ஐந்தாண்டுத் திட்டமாக 60:40 என்ற விகிதத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிதிப்பங்களிப்போடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 2022-23 ஆம் ஆண்டில் 5,28,000 கற்போருக்கு  இத்திட்டத்தின் வாயிலாக 28,848 மையங்களில் 28848 தன்னார்வலர்கள் மூலம் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு, வாழ்வியல் திறன் வழங்கப்பட்டுவருகிறது. https://youtu.be/lfCSx3ESMSQ https://youtu.be/5epzpZAfgZg

1. சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் (2019-20)  தமிழ்நாட்டில், கடந்த 2019-20 ஆம் ஆண்டில், சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவுத் திட்டமானது மாநில அரசின் 100% நிதிப்பங்களிப்பின் கீழ், திருவள்ளூர்,கடலூர், வேலூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய8 மத்திய சிறைவளாகங்களிலும் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறைவளாகத்திலும் சிறைத்துறை ஒருங்கிணைப்புடன் ரூ.14.60 இலட்சம் மதிப்பீட்டில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது.  இச்சிறப்புத் திட்டத்தின் இலக்கான 757 சிறைவாசிகள் என்கிற எண்ணிக்கையை விஞ்சி, 1844 சிறைவாசிகள்தங்களின் அடிப்படை எழுத்தறிவைப் பெற்று இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். 2. கற்போம் எழுதுவோம் இயக்கம்(2020-21): தமிழ்நாட்டில்,கடந்த 2020-21 ஆம் ஆண்டில்,2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, கற்போம் எழுதுவோம் என்கிற வயது வந்தோருக்கான புதிய எழுத்தறிவுத் திட்டம் ஒன்றிய மற்றும் மாநிலஅரசுகளின் 60:40 என்கிற நிதிப்பங்களிப்பின கீழ் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது. 15 வயதுக்குமேற்பட்ட, முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 3.10 இலட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடுதலே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கற்போருக்கான கட்டகம் மற்றும் தன்னார்வல ஆசிரியர்களுக்கான வழிகாட்டு புத்தகம் ஆகியன மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் தயாரிக்கப்பட்டு, இந்தியாவிலேயே முதன் முறையாக. கற்போருக்கான கட்டகங்களிலுள்ள பாடக் கருத்துக்கள் QR Codes வாயிலாக இணைக்கப்பட்டுள்ளன. மேலும், மாநிலத்தில் செயல்படுத்ப்பட்டு வருகின்ற வயது வந்தோர் கல்வித் திட்டங்களில் கண்டறியப்பட்டுள்ள கற்போர் பயனடையும் வகையில்,  ஒலி-ஒளி வடிவில் தயார் செய்யப்பட்ட காணொளிப் பாடங்கள் கல்வித் தொலைக் காட்சியின் வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. தன்னார்வல ஆசிரியர்களின் மெச்சத் தகுந்த சேவையின் வாயிலாக 15,823 கற்போர் மையங்களில் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.  இந்திய அளவில், கற்போம் எழுதுவோம் இயக்கத்தின்  100% இலக்கை எட்டியுள்ள மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. இத்திட்டத்தின் இலக்கான 3.10 இலட்சம் கற்போர்கள் என்கிற எண்ணிக்கையை விஞ்சி,3.19இலட்சம் கற்போர்கள் தங்களின் அடிப்படை எழுத்தறிவைப் பெற்று இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். வயது வந்தோர் கல்வி விழிப்புணர்வுப் பாடல்

வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் மாவட்டங்களில் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம்: தமிழ்நாட்டில், வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் (Aspirational Districts) சிறப்பு எழுத்தறிவுத் திட்டமானது மாநில அரசின் 100% நிதிப்பங்களிப்பின் கீழ் ரூ.6.23 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.  இத்திட்டத்தின் இலக்கு15 வயதுக்குமேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத 1,68,716 பேர் ஆவர்.  இவர்களுள், இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் 40,288 பேர் தங்களின் அடிப்படை எழுத்தறிவைப் பெற்று பயனடைந்துள்ளனர். மீதமுள்ள கற்போருக்கு 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் அடிப்படை எழுத்தறிவை வழங்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னோட்ட அடிப்படையிலான சிறப்பு எழுத்தறிவுச் செயல்பாடுகள் (2021) : மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் மேலான வழிகாட்டுதல்களின் படியும், கற்போம் எழுதுவோம் இயக்கச் செயல்பாடுகளின் கீழ் ஒரு சிறப்பு முயற்சியாகவும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில் முன்னோட்ட அடிப்படையிலான சிறப்பு எழுத்தறிவுச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மணிகண்டம் ஒன்றியத்தினை கல்லாதோர் இல்லாத ஒன்றியமாக மாற்றிடும் வகையில் இச்சிறப்புச் செயல்பாட்டின் நோக்கம் அமைந்துள்ளது.  முன்னோட்ட அடிப்படையிலான இச்சிறப்பு எழுத்தறிவுச் செயல்பாடுகள் 20.07.2021 அன்று மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரின் உதவியுடன் எழுத்தறிவற்றோரைக் கண்டறிய குடியிருப்புகள் வாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.  இதுவரை, 5.741 பேர் எழுத்தறிவற்றோராக இச்சிறப்பு நிகழ்வின் கீழ் கண்டறியப்பட்டுள்ளனர்.  Each one – Catch one – Teach one என்கிற முறையை அடிப்படையாகக் கொண்டு தன்னார்வலர்களின் சேவைகளின் வாயிலாக கற்பித்தல் மற்றும் கற்றல் நிகழ்வுகள் இம்முன்னோட்ட அடிப்படையிலான சிறப்பு எழுத்தறிவுச் செயல்பாடுகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.காட்சிப் படங்களில்

தொடர் கல்விக்கான பயனுள்ள இணையதள இணைப்புகள்:
மாநிலக் கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் யூடியூப் - https://www.youtube.com/channel/UC7GbVKqHPXww1acL1x9DNQw
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்:https://www.tnskill.tn.gov.in
ஸ்வயம்-https://swayam.gov.in
திறந்த வெளி பள்ளிக்கான தேசிய நிறுவனம் (NIOS)-https://www.nios.ac.in
முகப்புப் பக்கத்திற்கு திரும்ப