பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாடு அரசு

×

18 வயதுக்கு முன் எந்த குழந்தைக்கும் திருமணம் செய்து வைக்க முடியாது

(18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான 24x7 கட்டணமில்லா ஹெல்ப்லைன்)

  • நீங்கள் அச்சுறுத்தப்பட்டதாகவோ அல்லது துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவோ அல்லது துன்புறுத்தப்படுவதையோ உணர்ந்தால் – உணர்ச்சி ரீதியாக, உடல் ரீதியாக அல்லது பாலியல் ரீதியாக
  • நீங்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால்
  • குழந்தைத் திருமணம் நடப்பது குறித்து உங்களுக்குத் தெரிந்தால், அதைப் பற்றி தெரிவிக்க வேண்டும்
  • தேர்வுகள் அல்லது உயர்கல்விக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்டால்
  • நீங்கள் ஒரு தொழில் ஆலோசகரிடம் பேச விரும்பினால்
  • கல்விச் சான்றிதழ்களில் சந்தேகம் இருந்தால்
பள்ளி சுவரொட்டிகளை இங்கே பதிவிறக்கவும்

*அழைப்பாளர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்

A
SS

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி

அறிமுகம்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி என்பது பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டமாகும். இது மழலையர் கல்வி முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளடக்கிய சமமான தரமான கல்வியை உறுதி செய்வதை முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. இது அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், ஆசிரியர் கல்வி என்ற மூன்று திட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டமாகும். இத்திட்டத்தின் முக்கிய விளைவுகள் – உலகளாவிய அணுகல், சமபங்கு, தரம் மற்றும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களை பலப்படுத்தி மேம்படுத்துதல் போன்றவைகளாக கருதப்படுகிறது.நோக்கம்
திட்டக்கூறுகள்
வழங்கப்படும் சேவைகள்
  • கற்றல் – கற்பித்தலில் தரமான உள்ளீடுகளை வழங்குகிறது. குறிப்பாக காணொலி காட்சி (AUDIO – VISUAL) மின்னியல் கற்றலின் உள்ளடக்கத்தை உருவாக்குதல் மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் வழங்கப்படும் பாடத்தகவல்களில் இணைக்கப்பட்டுள்ள விரைவுத்துலங்கள் குறியீடு (QR CODE ) மூலம் மாணவர்களை எளிதில் அணுகக் கூடிய மதிப்பீட்டு வினாக்கள் உருவாக்கப்பட்டுள்ளதைக் கூறலாம். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி என்பது மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சியினை ஒருங்கிணைக்கும் இணைப்புக்குரிய இயக்ககமாக செயல்படுகிறது.

  • அனைத்து பள்ளிச் செல்லும் வயதுடைய குழந்தைகளுக்கும் உள்ளடக்கிய தரமான மற்றும் சமமான கல்வியில் சிறப்புக் கவனம் செலுத்தி உறுதி செய்கிறது.

  • மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பள்ளிக் கல்வித் துறையில் உள்ள 3 இலட்சம் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப (ICT) பயன்பாட்டுப் பயிற்சியினை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவியுடன் வழங்குகிறது. இப்பயிற்சியின் மூலம் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) உதவியுடன் கற்றல் கற்பித்தல் திறனை அதிகரிக்கச் செய்து வகுப்பறைச் செயல்பாடுகள் மேம்படுத்தப்படுகிறது.

காட்சிப் படங்களில்
முகப்புப் பக்கத்திற்கு திரும்ப