பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாடு அரசு

×

18 வயதுக்கு முன் எந்த குழந்தைக்கும் திருமணம் செய்து வைக்க முடியாது

(18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான 24x7 கட்டணமில்லா ஹெல்ப்லைன்)

 • நீங்கள் அச்சுறுத்தப்பட்டதாகவோ அல்லது துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவோ அல்லது துன்புறுத்தப்படுவதையோ உணர்ந்தால் – உணர்ச்சி ரீதியாக, உடல் ரீதியாக அல்லது பாலியல் ரீதியாக
 • நீங்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால்
 • குழந்தைத் திருமணம் நடப்பது குறித்து உங்களுக்குத் தெரிந்தால், அதைப் பற்றி தெரிவிக்க வேண்டும்
 • தேர்வுகள் அல்லது உயர்கல்விக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்டால்
 • நீங்கள் ஒரு தொழில் ஆலோசகரிடம் பேச விரும்பினால்
 • கல்விச் சான்றிதழ்களில் சந்தேகம் இருந்தால்

*அழைப்பாளர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்

A
SCERT

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்

நிறுவனத்தைப் பற்றி

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மாநிலத்தின் உயரிய கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் பல்வேறு கல்விச் செயல்பாடுகளான கலைத்திட்டம், தயாரித்தல், பாடநூல் எழுதுதல், பாடநூல்களை மீளாய்வு செய்தல், ஆண்டு வரவு செலவு திட்டமிடுதல், ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சிகளை வடிவமைத்து வழங்குதல், மாநில அளவிலான அடைவுச் சோதனைகளை நடத்துதல், தேசிய அடைவுச் சோதனைகளை நடத்துதல், கொள்குறி வினாக்களைத் தயாரித்தல் போன்றவற்றில் ஆண்டு முழுவதும் ஈடுபடுகிறது.ஆசிரியர்களது திறனை மேம்படுத்தும் நோக்கத்தோடு பல்வேறு தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வடிவமைத்து வழங்கி வருகிறது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தையும் நவீன கண்டுபிடிப்புகளையும், கற்றல் கற்பித்தல் உத்திகளிளையும் ஒருங்கிணைத்து மாணவர்கள் தொழில்நுட்ப சவால்களைச் சமாளிக்கவும் உதவுகிறது. மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தெரிவுகள் சார்ந்த கலந்தாலோசனையையும் இந்நிறுவனம் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் கல்விசார் பிரச்சனைகள் பற்றி செயல் ஆராய்ச்சிகளையும் கல்வி ஆராய்ச்சிகளையும் செய்ய மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மூலம் வழிகாட்டுகிறது. இவ்வாய்வுகள் கொள்கை முடிவுகள் எடுக்கும் உயர் அலுவலர்களுக்கு தரவு அடிப்படையிலான முடிவுகளை எடுத்து மாநிலம் முழுவதும் கற்றல் விளைவுகளின் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க உதவி வருகின்றன.

தொலைநோக்கு

கற்றல் விளைவுகளில் கவனம் செலுத்தும் கல்விமுறையை உருவாக்கி, பலதரப்பட்ட முழுமையான, மகிழ்ச்சிகரமான கற்றல் அடிப்படையிலான பலதரப்பட்ட கற்பித்தல் உத்திகளையும் மாற்று கற்றல் உத்திகளையும் உருவாக்கி, உயர்தர சிந்திக்கும் ஆற்றலை தூண்டும் மதிப்பீட்டு உத்திகள் மற்றும் கணினி வழிக் கற்றல் முறைகளையும் மாணவர்களுக்கு வழங்கி கணினி யுகத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகரமாக முறியடிக்க மாணவர்களது திறன்களை வளர்த்தல்.

Read More

புதியன

திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள்

எண்ணும் எழுத்தும் – ஒரு கண்ணோட்டம்

தொடக்க வகுப்புகளின் கற்றல், கற்பித்தலின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கமாவது, 2025ஆம் கல்வியாண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மூன்றாம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள், பொருள் புரிந்து படிக்கவும் எழுதவும் அடிப்படைக் கணக்குகளைச் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதாகும்.

கரோனா பெருந்தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் களைவதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதைநோக்கி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைமையில் எண்ணும் எழுத்தும் திட்டமானது, 2022-23ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

எண்ணும் எழுத்தும் அறிமுகப் பயிற்சி

              எண்ணும் எழுத்தும் திட்டப் பரவலாக்கத்தின் ஒரு கூறாக ஆசிரியர்களுக்கான அறிமுகப் பயிற்சிகள் மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் நடத்தப்பட்டன.  இப்பயிற்சிகள் இரண்டு முக்கிய நோக்கங்களை மையப்படுத்தின.

 • மாநிலத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் தேவை மற்றும் இன்றியமையாமையை உணர்த்துதல்.
 • பாடவாரியாக, நிலைவாரியான கற்றல் கற்பித்தலை நிகழ்த்துவதற்கான வழிமுறைகளிலும் கற்றல் கற்பித்தல் வளங்களைப் பயன்படுத்துவது சார்ந்தும் உரிய வழிகாட்டுதல்களை   வழங்கிப் பயிற்சி அளித்தல்.

 மாநில அளவிலான அறிமுகப் பயிற்சி

எண்ணும் எழுத்தும் மாநில அளவிலான பயிற்சி, 23.05.2022 முதல் 28.05.2022 வரை ஆறு நாள்கள் மதுரையில் உள்ள பில்லர் மையத்தில்,  நடைபெற்றது.  இப்பயிற்சி, மாநில வளக்குழுவில் உள்ள பாட வல்லுநர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள், வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கருத்தாளர்களாகக் கொண்டு நடத்தப்பட்டது.  பயிற்சிக்கான மாதிரிக் காணொலிகளையும் கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகளையும் பயிற்சி அமர்வுக்கான திட்டங்களையும் எண்ணும் எழுத்தும் திட்ட அடுத்தகட்டப் பயிற்சிக்கான சரிபார்ப்புப் பட்டியலையும் கணினி நழுவங்களையும் மற்றும் பயிற்சிக்குத் தேவையான பிற அனைத்து வளங்களையும்  மாநில வளக்குழு உருவாக்கி வழங்கியது.

மாநிலப் பயிற்சியின் தொடக்க உரையில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் தேவை, இலக்கு ஆகியவற்றை எடுத்துரைத்து மாற்றத்தை உருவாக்குபவர்களாக ஆசிரியர்கள் மாற வலியுறுத்தினார்.  ஆங்கில மற்றும் கணக்குப் பாடப் பயிற்சிகளில்  எண்ணும் எழுத்தும் திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர்களான திருமதி. உமா ராமன், முனைவர். இராமானுஜன் ஆகியோர் அறிமுக உரை வழங்கினர்.  இம் மூன்று சுற்றுப் பயிற்சிகளில் அனைத்து மாவட்டங்களைச்  சேர்ந்த 380 முதன்மைக் கருத்தாளர்கள் பயிற்சி பெற்றனர்.

மாவட்ட அளவிலான பயிற்சி

மாவட்ட அளவிலான பயிற்சி 2022, சூன் 1, 2 ஆகிய நாள்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது.  மாநில அளவில் பயிற்சி பெற்ற முதன்மைக் கருத்தாளர்கள், மாவட்ட அளவில் 4900 கருத்தாளர்களுக்குப் பயிற்சி அளித்தனர். எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கம், இலக்கு மற்றும் பாடப்பொருள் ஆகியவை தெளிவாகப் பயிற்சியின் மூலம் எடுத்துரைக்கப்பட்டன.

வட்டார அளவிலான பயிற்சி

வட்டார அளவிலான பயிற்சி, சூன் 6, 2022 முதல் சூன்10, 2022 வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசுதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தொடக்க வகுப்பு ஆசிரியர்கள், எண்ணும் எழுத்தும்  பயிற்சியைப் பெற்றனர்.

ஒவ்வொரு பயிற்சி அமர்விலும் பயிற்சி அரங்கு வண்ணமயமாக, குழந்தைகளை ஈர்க்கக்கூடியவகையில் எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கென உருவாக்கப்பட்ட மற்றும் பாடம் சார்ந்த பிற கற்றல் பொருள்களைக் கொண்டதாகக் கட்டமைக்கப்பட்டு இருந்தது.     இத்தகைய வண்ணமயமான பயிற்சிச் சூழல், பங்கேற்பாளர்களை ஆர்வத்துடன் பயிற்சியில் பங்கேற்கத் தூண்டுவதாக அமைந்து இருந்தது.

நிகழ்ச்சியின் நோக்கம்: 

 • பாடக்கருத்துக்களைப் பற்றிய அறிவை முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் பெறுதல்
 • மையப்பாடக்கருத்துக்களை விடுபாடாமல் கற்கச் செய்தல்

சிறப்பம்சங்கள்:

 • கோவிட் – 19 பொருந்தொற்று காரணமாக ஏற்பட்ட கற்றல் – கற்பித்தல் சிக்கல்களை களைய ஏற்படுத்தப்பட்ட உயர் நிலை குழுவின் பரிந்துரையின்படி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 1 முதல் 12 வகுப்புகளுக்கு அனைத்து கற்றல் விளைவுகளை உள்ளடக்கி முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை உருவாக்கியது.
 • அனைத்துப் பாடக்கருத்துக்களும் கற்றல் விளைவுகளுடன் நேரடி தொடர்புடையவை என்பதால் முக்கிய பாடக்கருத்துக்கள் அடங்கிய முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது.
 • பாடக்கருத்துக்களிடையே உள்ள தொடர்ச்சி விடுப்படாமல் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டமானது கல்வியாளர்களால் உருவாக்கப்பட்டது.
 • 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள பாடங்களுக்கு பாடத்தின் முக்கிய மற்றும் அடிப்படைக்கருத்துக்கள் முழுமையடையும் வண்ணம் இப்பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது.
 • 1 முதல் 8 வகுப்புகளுக்கு 50 % பாடத்திட்டம் மற்றும் 9 முதல் 12 வகுப்புகளுக்கு 60% – 65% பாடத்திட்டம் அளவிலான முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது.

பயணாளிகள்:

 • 2020 – 2021 மற்றும் 2021 – 2022 ஆம் கல்வியாண்டுகளுக்கு 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது.

விளைவுகள்:

 • 1 முதல் 12 வகுப்பு மாணவர்கள் கற்றலில் முழுமைப்பெற மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பல்வேறு கற்றல் – கற்பித்தல் வளங்களை புத்தகங்கள், வானொலிகள் மற்றும் காணொலிகள் வாயிலாகவும் வழங்கியது.
 • கோவிட் பொருந்தொற்று காரணமாக  மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் நீக்கியது.

நிகழ்ச்சியின் நோக்கம்: 

 • இணைய மற்றும் தொலைக்காட்சி வசதி இல்லாத குடும்பங்களைச் சார்ந்த பத்து  மற்றும் பன்னிரன்டாம் வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்கள் வானொலி வயிலாக கற்றல் அடைவினைப் பெறுதல்.

சிறப்பம்சங்கள்:

 • ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1168  ஒலிப்பாடங்கள் (15 நிமிடங்கள் வீதம்) 292 நாள்களுக்கு தயாரிக்கப்பட்டு அவை அகில இந்திய வானொலியின் 10 நிலையங்கள்  (சென்னை, கோவை, மதுரை, திருச்சி, புதுச்சேரி, திருநெல்வேலி, ஊட்டி, தருமபுரி, காரைக்கால்  மற்றும் நாகர்கோயில்)  வாயிலாக திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை தினமும் மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை ஒலிப்பரப்பப்பட்டு வருகிறது. 
 • இதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறையின் வழியாக அனைத்து பள்ளிகளுக்கும் மாதந்தோறும் முன்கூட்டியே வழங்கப்பப்படுகிறது.
 • இந்த அட்டவணையை அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பின்போது விளம்பர நிகழ்ச்சியாகவும் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது தகவல் செய்தியாக (Scrolling News) வெளியிடப்பட்டு வருகிறது.

பயன்பெறுவோர்: 

 • பத்து  மற்றும் பன்னிரன்டாம் வகுப்பு  பயிலும் மாணவர்கள்.

கற்றல் விளைவு:

 • பத்து மற்றும் பன்னிரன்டாம் வகுப்பு மாணவர்கள் வானொலிப் பாடங்களைக் கேட்பதன் வழியாக பாடம் சார்ந்த திறன்களைப் பெறுவர்.

நிகழ்ச்சியின் நோக்கம்: 

 • பள்ளி செல்லும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழுவுத்திட்டம்.
 • கற்பித்தல் பொருள்கள் தயாரித்தல் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி  சுகாதாரப்  பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் கருத்தாளர்களுக்கான பயிற்சி ஆகியன தமிழ் நாட்டிலுள்ள ஐந்து மாவட்டங்களில் நடைமுறைப்படுத்துதல்.

சிறப்பம்சங்கள்:

 • பள்ளி செல்லும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழுவு தொடர்பான தலைப்புகளைக் கொண்ட கட்டகம், வேலூர், அரியலூர், கரூர், இராமநாதபுரம், மற்றும் விருதுநகர் ஆகிய தமிழ்நாட்டின் ஐந்து  மாவட்டங்களில் மாநிலத்தின் தேசிய நலவாழ்வு திட்டத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
 • மாநில  கல்வியியல்  ஆராய்ச்சி  மற்றும்  பயிற்சி  நிறுவனம் மற்றும் மாவட்ட  கல்வியியல்  ஆராய்ச்சி  மற்றும்  பயிற்சி  நிறுவன கல்வியாளர்கள் மற்றும் நலவாழ்வு துறை வல்லுநர்கள் ஆகிய மாநில கருத்தாளர்களுக்கு இணைய வழியில் தேசிய வல்லுநர்களால் பயிற்சி நடத்தப்பட்டது.
 • மாநில  கல்வியியல்  ஆராய்ச்சி  மற்றும்  பயிற்சி  நிறுவனம் வல்லுநர்களால் தலைப்புக்குகளுக்கான காணொளிகள் தயாரிக்கப்பட்டு அவை ஆசிரியர்களின் பார்வைக்காக தமிழ்நாடு ஆசிரியர் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் நோக்கம்: 

 • முந்தைய வகுப்பிலிருந்து அடுத்த வகுப்பிற்கு செல்வதற்கு  மாணவர்களைச் சிறப்பாக தயார் செய்யும் பொருட்டு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானது முந்தைய  வகுப்புகளின் முக்கியமான கற்றல் விளைவுகளைக் கொண்டு அடிப்படை மற்றும் முக்கியமான கருத்துகளை உள்ளடக்கிய புத்தாக்கப் பயிற்சி கட்டகத்தைத் தயாரித்துள்ளது.

சிறப்பம்சங்கள்:

 • முந்தைய வகுப்புகளின் பொதுவான கற்றல் விளைவுகளின் அடிப்படையில் புத்தாக்கப் பயிற்சி கட்டகமானது அடிப்படை மற்றும் முக்கியமான கருத்துகளைத் தக்க வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துகிறது.
 • மேலும் மாணவர்கள் அவர்களின் தற்போதைய கருத்துகளை நன்கு புரிந்துகொள்ள இப்புத்தாக்கப் பயிற்சி கட்டகம் உதவுகிறது.

பயன்பெறுவோர்: 

 • 2 முதல் 12 ஆம் வகுப்பு  மாணவர்கள்.

கற்றல் விளைவு:

 • அடுத்த வகுப்பில் தற்போது கற்பிக்கப்படும் மாணவர்களுக்கு அடிப்படை மற்றும் முக்கிய கருத்துகளை எவ்வித தொய்வின்றி     கற்பிக்க இக்கட்டகம் முக்கிய பங்களிக்கின்றன.

நிகழ்ச்சியின் நோக்கம்: 

 • கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் விதமாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  மதிப்பீட்டு வினாக்களை தயாரித்துள்ளது.

சிறப்பம்சங்கள்:

 • மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் இணைந்து  தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு மதிப்பீட்டு வினாக்களை தயாரித்துள்ளது.
 • தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில், கொடுக்கப்பட்ட பாடப்பகுதிகளைப் படித்த பின் புரிந்து விடையளித்தல் மற்றும் மொழிக்கூறுகள் அடிப்படையிலும், கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் உயர் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் வினாக்கள் தயாரிக்கப்பட்டன.
 • ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில், உயர்தொழில் நுட்ப ஆய்வகங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கல்வி மேலாண்மை தகவல் மையம் (EMIS) ஆகியவை இணைந்து இவ்வினாடி- வினாவினை நடத்தினர்.
 • இவ்வினாடி-வினா நடைபெற்ற பின்னர் ஆசிரியர் மாணவர்களுடன் வினா-விடைகளை கலந்துரையாடல் மூலம் விளக்கி கூறினர்.

பயன்பெறுவோர்: 

 • 10ம் வகுப்பு  பயிலும் மாணவர்கள்.

கற்றல் விளைவு:

 • மாணவர்கள் 5 பாடங்களிலும் உயர் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளை வெளிப்படுத்தினர்.

 

பயிற்சியின் நோக்கங்கள்:

 • கற்றல்-கற்பித்தலில் தொழில் நுட்பத்தைக்கையாளும் திறனை மேம்படுத்துதல்.
 • ஆசிரியர்களிடம் கற்பித்தல் திறனை வளப்படுத்துதல்.
 • உயர்தொழில் நுட்ப ஆய்வகங்கள் மூலம் தொடர் கற்றலை உறுதிப்படுத்துதல்.
 • விரைவானமற்றும்எளிமையானகற்பித்தலைஉறுதிப்படுத்துதல்.

சிறப்பம்சங்கள்:

 • இதுவரை 30 நிமிடகால அளவில் 7434 காணொளிப்பாடங்கள் தயாரிக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்டுள்ளது.
 • தயாரிக்கப்பட்ட காணொளிகள், 9 – தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள், 4 DTH சேவைகள்மற்றும் 6 கேபிள் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஆகியவைகள் மூலமாகவும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. மேலும், You tube அலைவரிசைகளிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
 • மாணவர்கள் விரைவாகதங்களது வேகத்தில் கற்றுக்கொள்வதற்கு காணொளிகளுடன் வைக்கப்பட்டுள்ள விரைவுத்துலங்கள் (QR) குறியீடுகள் வழியாக மதிப்பீடு செய்து கொள்ளவும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

பயனாளர்கள்:

 • தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரையிலான ஆசிரியர்கள்.
 • 2.24 – இலட்சம்அரசுப்பள்ளிஆசிரியர்கள்.

பயிற்சியின் விளைவுகள்:

 • ஒவ்வொரு நாள் பயிற்சியின் போது அனைத்து ஆசிரியர்களும் இணையவழியில் தங்களது மதிப்பீட்டுப்பணியை செய்தனர்.
 • கற்றல்-கற்பித்தலில் தொழில்நுட்பத்தைக்கையாளும் திறன் மேம்பட்டுள்ளது.
 • ஆசிரியர்களிடம் புதுமையான கற்பித்தல் அணுகுமுறை வளப்பட்டுள்ளது.
 • உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் மாணவர்களிடம் தொடர் கற்றல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
 • மாணவர்கள் விரைவாகவும் எளிமையாகவும் பாடப் பொருளைக் கற்றுக்கொண்டனர்.

பின்னூட்டம்:

 • முதலாம்வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரையிலான பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள இருபரிமாண மற்றும் முப்பரிமாணகாட்சிகளைக் காட்சிப்படுத்தி பார்க்கவும் உதவிபுரிகிறது.
 • ஆசிரியர்களின் கற்றல்-கற்பித்தலில் உயர் தொழில்நுட்பமானது, அவர்களின் தொழில் சார்ந்த வளர்ச்சிக்கு வழிவகைச் செய்வதுடன், அவர்களின் ஆளுமைத் திறன்களையும் வளர்க்கிறது.
 • பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்த நிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் வினாத்தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்புகள் (தொடர்புடையகருத்துகள்):

 • நேரடிப்பயிற்சிகளை மட்டுமே வழங்கி வந்த நிலையில் தற்போது இணைய வழியில் பணியிடப்பயிற்சி வழங்குதல் என்பது ஒரு சீரிய முயற்சியாகும்.
 • ஆசிரியர்கள்,கணினி குறித்த அடிப்படை அறிவு, இணையம் மற்றும் அதன் செயல்பாடுகள், கல்வியியல் மேலாண்மைத் தகவல்கள் ஆகியவற்றை இப்பயிற்சி மூலம் அறிந்து கொண்டனர்.

வழங்கப்படும் பயிற்சிகள் (பணி முன் பயிற்சி)

நோக்கம்:
எதிர்கால தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்
பயனாளர்கள்:
12ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்ற பொதுப் பிரிவினரும், 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்ற BC/MBC/SC/ST பிரிவினரும் விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் ஆவர். நடப்பு கல்வியாண்டின் ஜூலை 31 அன்று, விண்ணப்பதாரரின் வயது, பொதுப்பிரிவனருக்கு 30 வயதுக்கு மிகாமலும், SC/ST பிரிவினருக்கு 35 வயதுக்கு மிகாமலும், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
விண்ணப்பதாரர் தங்களுக்கு அருகில் உள்ள கீழ்க்காணும் நிறுவன முதல்வர்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் / அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் / ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் / அரசு நிதி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் / சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் / ஆங்கிலோ- இந்தியன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்.
தகுதி, ஆவணங்கள் மற்றும் குறை-தீர்வுகள் பற்றிய மேலும் தகவல்களுக்கு
இங்கே சொடுக்கவும்.

நோக்கம்:
எதிர்கால உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்
பயனாளர்கள்:
12ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்ற பொதுப் பிரிவினரும், 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்ற BC/MBC/SC/ST பிரிவினரும் விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் ஆவர். நடப்பு கல்வியாண்டின் ஜூலை 31 அன்று, விண்ணப்பதாரரின் வயது, பொதுப்பிரிவனருக்கு 30 வயதுக்கு மிகாமலும், SC/ST பிரிவினருக்கு 35 வயதுக்கு மிகாமலும், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
விண்ணப்பதாரர் தங்களுக்கு அருகில் உள்ள உடற்கல்வியியல் நிறுவன முதல்வர்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
தகுதி, ஆவணங்கள் மற்றும் குறை-தீர்வுகள் பற்றிய மேலும் தகவல்களுக்கு
இங்கே சொடுக்கவும்.

காட்சிப் படங்களில்


முகப்புப் பக்கத்திற்கு திரும்ப

Follow Us @ TNSCERT @ TNSCERT