பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாடு அரசு

×

18 வயதுக்கு முன் எந்த குழந்தைக்கும் திருமணம் செய்து வைக்க முடியாது

(18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான 24x7 கட்டணமில்லா ஹெல்ப்லைன்)

  • நீங்கள் அச்சுறுத்தப்பட்டதாகவோ அல்லது துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவோ அல்லது துன்புறுத்தப்படுவதையோ உணர்ந்தால் - உணர்ச்சி ரீதியாக, உடல் ரீதியாக அல்லது பாலியல் ரீதியாக
  • நீங்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால்
  • குழந்தைத் திருமணம் நடப்பது குறித்து உங்களுக்குத் தெரிந்தால், அதைப் பற்றி தெரிவிக்க வேண்டும்
  • தேர்வுகள் அல்லது உயர்கல்விக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்டால்
  • நீங்கள் ஒரு தொழில் ஆலோசகரிடம் பேச விரும்பினால்
  • கல்விச் சான்றிதழ்களில் சந்தேகம் இருந்தால்
பள்ளி சுவரொட்டிகளை இங்கே பதிவிறக்கவும்

*அழைப்பாளர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்

A
DSE

பள்ளிக் கல்வித் துறை


பள்ளிகள்


மாணவர்கள்


ஆசிரியர்கள்

துறையைப் பற்றி:

எதிர்காலக் குடிமக்களுக்கு தரமான கல்வியை அளிப்பதற்கு, தமிழ்நாடு அரசு மிகுந்த முக்கியத்துவம் வழங்குகிறது. இன்றைய குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு கல்வியே வாயிலாகும். மேலும், பள்ளிக் கல்வியின் தொடக்க ஆண்டுகளே மாணவர்களின் எதிர்கால நலனுக்கான அடித்தளத்தை உருவாக்குகின்றன. அனைத்து குழந்தைகளுக்கும் தரமான எளிதில் கிடைக்கக்கூடிய உள்ளடக்கிய கல்வியை வழங்குவதே மாநிலத்தின் முதன்மையான குறிக்கோள் ஆகும். இதன் அடிப்படையில் தான் அரசாங்கம் 2021-22ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.32,599.54 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

நோக்கம்:
திட்டங்கள்

சுகாதர முகாம்கள், இரத்த தான முகாம்கள், பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மரம் நடுதல் போன்ற சமூகப் பணிகளில் ஈடுபடச் செய்வதன் வழியாக மாணவர்களின் ஆளுமைத் திறனை மேம்படுத்தலே நாட்டு நலப்பணித் திட்டத்தின் நோக்கம் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டத் தன்னர்வலர்களாக 97,650 மாணவர்கள் பதிவு செய்துகொண்டுள்ளனர்; 1958 அணிகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் இத்திட்டத்தின் கீழ் வழக்கமான செயல்பாடுகளை மேற்கொள்ள ரூ. 2.5 கோடியும் சிறப்பு முகாம்களை நடத்த ரூ. 2 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே விளையாட்டுப் பண்பாட்டை வளர்ப்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. மாவட்ட / மாநில / தேசிய அளவிலான பலவேறு விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கு கொள்ளப் பயிற்சியும் ஊக்கமும் அளிக்கப்படுகின்றன. இதனால் வளர்ச்சியடையும் விழிப்புணர்வு காரணமாக, ஆண்டுதோறும் மண்டல அளவிலான போட்டிகள் முதல் தேசிய அளவிலான போட்டிகள் வரை 15 இலட்சம் மாணவர்கள் பங்குகொள்கின்றனர்.  

அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 1 முதல் 12 வகுப்பு வரை பயிலும், மரணம் அடைந்ததாலோ அல்லது விபத்தில் நிரந்தர முடக்கம் அடைந்ததாலோ வருவாய் ஈட்டும் பெற்றோரை (தந்தை அல்லது தாய்) இழந்த மாணவர்களுக்கு நிதி அளிக்கப்படுகின்றது. அப்பாதகமான சூழ்நிலைமைகள் அத்தகைய மாணவர்களின் கல்வியைப் பதிக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியக உள்ளது. வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர் பெயரில் அரசு நிதி நிறுவனங்களில் ரூ. 75,000 வைப்புநிதி ஆகச் செலுத்தப்படுகின்றது. 2020-21ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக ரூ. 5.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறபடுத்தப்பட்டோர் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அந்தந்த நலத் துறைகளின் வாயிலாக மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. பள்ளிக் கல்வித் துறை வாயிலாகப் பிற மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. 
  • அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

2020-21 ஆண்டில், புதிய உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி கட்டடங்கள், கூடுதல் வகுப்பு அறைகள், கணினி அறைகள், நூலகக் கட்டடங்கள், ஆய்வுக் கூடங்கள், ஆய்வுக்கூடக் கருவி, கலை மற்றும் கைவினை அறைகள், கழிப்பறைகள், குடிநீர் வசதிகள், சூரிய மின் ஆற்றல், கைப்பிடியுடன் கூடிய சாய்தளங்கள் முதலான பணிகள் ரூ. 182.66 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

வழங்கப்படும் சேவைகள்

நோக்கம்: மாநில பாடத்திட்டத்தை தவிர்த்த மற்ற பாடத்திட்டங்களில் அதாவது IGCSE 10 ஆம் நிலை GCE ’AS’ நிலை மற்றும் A நிலை, IB (பட்டயம்) போன்ற பாடத்திட்டங்களில் பயின்ற மாணவர்களுக்கு இணைச் சான்றிதழ் வழங்குதல்.   பயனாளர்கள்: மாநில பாடத்திட்டத்தை தவிர்த்த மற்ற பாடத்திட்டங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள்.   யாரிடம் விண்ணப்பம் செய்வது மாவட்ட அளவில் - தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர். மாநில அளவில்: இணை இயக்குநர் (தொழிற்கல்வி) பள்ளிக் கல்வி ஆணையரகம். தகுதி, தேவையான ஆவனங்கள், குறைதீர் செயல்முறைகள் ஆகியன குறித்த கூடுதல் தகவல்கள் பெற இங்கே சொடக்கவும்.

நோக்கம்: வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர முடக்கம் அடைந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்காக ரூ.75 ஆயிரம் நிதியுதவி அளித்தல்.   பயனாளர்கள்: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர முடக்கம் அடைந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்காக ரூ.75 ஆயிரம் நிதியுதவி அளித்தல்.   யாரிடம் விண்ணப்பம் செய்வது: வட்டார அளவில் : தொடர்புடைய வட்டாரக் கல்வி அலுவலர் மாவட்ட அளவில் : தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (பள்ளி வழியாக) மாநில அளவில்: இணை இயக்குநர் (நாட்டுநலப் பணித்திட்டம்) பள்ளிக் கல்வி ஆணையரகம். தகுதி, தேவையான ஆவனங்கள், குறைதீர் செயல்முறைகள் ஆகியன குறித்த கூடுதல் தகவல்கள் பெற இங்கே சொடக்கவும்.

நோக்கம்: பள்ளி மற்றும் பள்ளிசார் செயல்பாடுகளின் போது எதிர்பாராது நிகழும் விபத்துகளினால் பாதிப்புக்கு உள்ளாகும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு நிதியுதவி அளித்தல். இறப்பு நேரிடின் ரூ. 1 இலட்சமும் பெரிய காயங்களுக்கு ரூ. 50 ஆயிரமும் சிறிய காயங்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்குதல். பயனாளர்கள்: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் விபத்துக்களினால் பாதிப்புக்குள்ளாகும் மாணவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர். யாரிடம் விண்ணப்பம் செய்வது: வட்டார அளவில் : தொடர்புடைய வட்டாரக் கல்வி அலுவலர் மாவட்ட அளவில் : தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (பள்ளி வழியாக) மாநில அளவில்: இணை இயக்குநர் (நாட்டுநலப் பணித்திட்டம்) பள்ளிக் கல்வி ஆணையரகம். தகுதி, தேவையான ஆவனங்கள், குறைதீர் செயல்முறைகள் ஆகியன குறித்த கூடுதல் தகவல்கள் பெற இங்கே சொடக்கவும்.

நோக்கம்: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாற்றுச் சான்றிதழுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழில் பிறந்த தேதி அல்லது பெயர் திருத்தம் செய்தல். பயனாளர்கள்: மாநில பாடத்திட்டத்தில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள். யாரிடம் விண்ணப்பம் செய்வது: மாவட்ட அளவில் : தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (பள்ளி வழியாக) மாநில அளவில்: இணை இயக்குநர் (நாட்டுநலப் பணித்திட்டம்) பள்ளிக் கல்வி ஆணையரகம். தகுதி, தேவையான ஆவனங்கள், குறைதீர் செயல்முறைகள் ஆகியன குறித்த கூடுதல் தகவல்கள் பெற இங்கே சொடக்கவும்

நோக்கம்: பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினைச் சார்ந்த தகுதி வாய்ந்த மாணவர்கள் இடைநிலைக் கல்வியை தொடரும வகையில் படிப்பு உதவித்தொகை வழங்குதல்.  தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் 9 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரையிலான 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 12 ஆயிரம் பெறுதல். படிப்பு உதவித்தொகையானது ஆண்டிற்கு ஒரே தவணையாக வழங்கப்படும். அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகத்தால் இத்திட்டத்திற்கான  எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படும். பயனாளர்கள்:   அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7 ஆம் வகுப்பில் 55 % மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தற்போது 8 ஆம் வகுப்பு பயிலும மாணவர்கள்.  SC / ST மாணவர்கள் 7 ஆம் வகுப்பில் 50 விழுக்காட்டிற்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.  யாரிடம் விண்ணப்பம் செய்வது: வட்டார அளவில் : தொடர்புடைய வட்டாரக் கல்வி அலுவலர் மாவட்ட அளவில் : தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (பள்ளி வழியாக) மாநில அளவில்: இணை இயக்குநர் (நாட்டுநலப் பணித்திட்டம்)  பள்ளிக் கல்வி ஆணையரகம். தகுதி, தேவையான ஆவனங்கள், குறைதீர் செயல்முறைகள் ஆகியன குறித்த கூடுதல் தகவல்கள் பெற இங்கே சொடக்கவும்.

நோக்கம்: தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு 9 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரையிலான 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் ரூபாய் வழங்குதல். பயனாளர்கள்:  ஊரகப் பகுதிகளிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட சுயநிதிப் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பில் 50 % மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தற்போது 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள்  (பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்). யாரிடம் விண்ணப்பம் செய்வது: வட்டார அளவில் : தொடர்புடைய வட்டாரக் கல்வி அலுவலர் மாவட்ட அளவில் : தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (பள்ளி வழியாக) மாநில அளவில்: இணை இயக்குநர் (நாட்டுநலப் பணித்திட்டம்)  பள்ளிக் கல்வி ஆணையரகம். தகுதி, தேவையான ஆவனங்கள், குறைதீர் செயல்முறைகள் ஆகியன குறித்த கூடுதல் தகவல்கள் பெற இங்கே சொடக்கவும்.

காட்சிப் படங்களில்





முகப்புப் பக்கத்திற்கு திரும்ப