மாநில வள மையத்தின் சிறப்பு அம்சங்கள் :
தொடக்க நிலை முதல் மேல் நிலை வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் அதன் விரிவாக்கத்தை கிழ்க்காணும் அம்சங்களை பல விதமான கற்றலுக்கு வழிவகுக்கும் விதத்தில் (visual, auditory, kinesthetic, blended learning, diverse learning material for physically challenged people etc.,) உள்ளடக்கி வளமையம் வடிவமைக்கப்பட உள்ளது.
கல்வியின் நோக்கம் ஒவ்வொரு மாணவரும் 21-ஆம் நூற்றாண்டின் வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, உலக அளவில் திறமையானவர்களாக வளர்த்தெடுக்கப்படவேண்டியது இன்றியமையாதது ஆகும்.
கற்றல் கற்பித்தல் என்பது சவாலாக உள்ள இக்காலக்கட்டத்தில் கற்றல் வகுப்பறைக்கு அப்பாலும் தொய்வின்றி நடைபெற்றிட உரிய கற்றல் சூழல் அமைக்கப்பட வேண்டியது முழுமுதற் கடமை மற்றும் அவசியம். இதனை கருத்தில் கொண்டும் பலவிதமான கற்றல் சூழலை அமைத்திடும் விதத்திலும் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய மாநில வள மையம் பள்ளிக் கல்வி வளாகத்திலேயே அமைக்கப்பட உள்ளது.
தற்போது covid-19 நிமித்தமாக கல்வித் தொலைக்காட்சி வழி காணொளிகள் தயார் செய்யப்பட்டு மாணவர்கள் கற்றலில் தொய்வின்றி கற்றிட மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று.
சிறப்பு புலங்கள் கொண்ட வள மையத்தின் பிரிவுகள் மற்றும் நிலைகள் :
தொடக்க நிலை, உயர் தொடக்க நிலை, உயர் நிலை மற்றும் மேனிலை ஆகிய நான்கு நிலைகளுக்கும் ஏற்ப மொழி பாடங்களுக்கும் கணிதம், அறிவியல் சமூக அறிவியல் மற்றும் ICT போன்ற பாடங்களுக்கும் தனித்தனிப் பிரிவு (cell) என உரிய இடம் இவ்வள மையத்தில் ஒதுக்கப்பட உள்ளது.
- கற்றல் கற்பித்தல் சூழல்கள் மற்றும் வளங்கள் வளப்படுத்தும் விதத்தில் கீழ்க்காணும் முறைகளில் மாணவர்கள் களிப்புடன் கற்றிடவும் ஆசிரியர்கள் பலவிதக் கற்றல் கற்பித்தல் உத்திகளை வகுப்பறைகளில் ஈடுபாட்டுன் கற்பித்திடவும் இவ்வள மையத்தில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
- மாதிரிகள் வழி கற்றல்
- கலைத்திட்ட வடிவமைப்ப
- கலந்துரையாடிக் கற்றல்
- விளையாட்டு முறையில் கற்றல்
- அனுபவப் பூர்வமாக கற்றல்
- நிகழ்வுகள்
- காணொலிகள்
- ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி காலங்கள் நீங்காலகவும் பாடப்பகுதிகளுக்கு உரிய பல விதமான செயல்பாடுகளை செய்திட்டு கற்றல் கற்பித்தல் திறனை மேம்படுத்த இவ்வள மையத்தில் வாய்ப்புகள் உள்ளன.
- மாற்றுத் திறனாளிகளும் பயன் பெறும் விதத்தில் அதற்கென இடம் ஒதுக்கப்பட்டு உரிய கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளும் வடிவமைக்கப்பட உள்ளது.
- கற்றல் கற்பித்தலில் உள்ள சவால்களை திறமையுடன் புதுமையான உத்திகளை மேற்கொண்டு வகுப்பறையை உயிரோட்டமுள்ள வகுப்பறையாக செயலாற்றி வரும் ஆசிரியர்களின் புதுமையான படைப்புகளையும் அதன் வழி வெளிப்பாடு செய்திடும் மாணவர்கள் படைப்புகளையும் இவ்வள மையத்தின் காட்சிபடுத்தப்பட (showcase) உள்ளது.
- மொழித்திறன் மற்றும் கணிதத்திறன் மேம்படும் விதத்தில் மொழி ஆய்வகங்கள் மற்றும் கணித ஆய்வகங்கள் அமைக்கப்படுவது இதன் மற்றும் ஒரு சிறப்பு மிக்க அம்சமாகும்.
- நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துக்கள் உள்ளடக்கிய காணொலிகள் திரைகள் மூலம் கண்டுகளித்திட வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
- இவ்விதமாக அனைத்து வாய்ப்புகளையும் ஒருமுகப் படுத்தி ஒவ்வொரு படிநிலையிலும் மாணவர்கள் உரிய கற்றல் அடைவை அடைவதுடன் அவை மேம்படும் விதத்தில் உரிய பலவிதமான புதிய உத்திகளை உள்ளடக்கி மாணவர்கள் பிரமிப்புடன் உற்று நோக்கி அர்த்தமுள்ள மகிழ்ச்சியுடன் கூடிய கற்றலாக கற்றல் நடைபெறும் வகையில் மாநில வள மையத்தின் கற்றல் களம் வடிவமைக்கப்பட உள்ளது.